வேலூரில் அமைச்சர் துரைமுருகன் தேர்தல் விதி மீறல் - போலீசாருடன் வாக்குவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற திமுக வேட்பாளருடன் வந்த அதிகளவிலான ஆட்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அமைச்சர் துரைமுருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், தனது தந்தையும் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் திமுகவினருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்ற அதிகளவிலான ஆட்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்களையும் உள்ளே அனுமதிக்கும்படி அமைச்சர் துரைமுருகன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day