வேலூர்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியினை தேர்தல் நடத்தும் அலுவலர் தொடங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் கிடங்கில் இருந்து வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியது. வாக்குப்பதிவு இயந்திர கிடங்கை அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலெட்சுமி திறந்து வைத்து இயந்திரங்கள் அனுப்பும் பணியினை பார்வையிட்டார். 

Night
Day