வைகை அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 2 அடி குறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 2 அடி குறைந்துள்ளது. மூல வைகையாறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் 71 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம், ஒரே வாரத்தில் 2 அடி குறைந்து 69 அடியாக உள்ளது. தற்போது அணைக்கான நீர்வரத்து 790 கன அடியாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

Night
Day