ஶ்ரீ அய்யனார், ஶ்ரீ தான்தோன்றியம்மன், ஶ்ரீ ராஜமாதங்கி ஆலயங்களில் புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சாமி தரிசனம் செய்தார்.

திருவாரூர் மாவட்டத்துக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேற்று வருகை தந்தார். அப்போது புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீஅய்யனார் ஆலயத்திற்கு சென்று புரட்சித்தாய் சின்னம்மா அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். பின்னர் ஸ்ரீஅய்யனார் ஆலயத்தில் இருந்த அம்மனை வழிபட்டார்.

தொடர்ந்து நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதான்தோன்றியம்மன், மற்றும் ஸ்ரீராஜமாதங்கி அம்மன் ஆலயத்தில் புரட்சித்தாய் சின்னம்மா சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனது கரங்களால் அம்மனுக்கு தீப ஆரத்தி எடுத்து புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு நடத்தினார்.

திருவாரூர் மாவட்டத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சென்ற வழிநெடுகிலும் விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ந்தார்.

Night
Day