ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கூகுள் நிறுவனத்தின் புதிய கட்டண முறையை எதிர்த்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கூகுள் பிளே ஸ்டோரில் கட்டணம் செலுத்தி சில செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அதற்கான கட்டணத்தை "கூகுள் ப்ளே பில்லிங் சிஸ்டம்" மூலம் செலுத்த கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியது. இதை எதிர்த்து பாரத் மேட்ரிமோனி, ஷாதி டாட் காம் உள்ளிட்ட 13 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை, ரத்து செய்யக் கோரி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Night
Day