ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் மகளிர் கிளை சென்னையில் திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் தனது முதல் 'அனைத்து மகளிர் கிளை'யை சென்னையில் தொடங்கியுள்ளது. பிங்க் கிளை என்று அழைக்கப்படும் இந்த கிளை, ஒளிரும் தாழ்வாரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை உள்ளடக்கி பெண்களுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பெண்களின் உடல்நலக் காப்பீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் பெண் ஊழியர்களாலேயே நடத்தப்படுகிறது. இதுகுறித்து பேசிய நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராய், இது பெண்களுக்கு அதிகாரம் மற்றும் முன்னுரிமை அளிக்கும் முயற்சி என தெரிவித்தார். இதனிடையே செல்போன் செயலிகள் மூலமாகவே காப்பீடுகளை பெற்று கொள்ளளாமென சென்னையின் பிராந்திய தலைவர் பாலாஜி பாபு தெரிவித்தார்.

Night
Day