ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த கடும் போராட்டங்களை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. விசாரணையில், தூத்துக்குடி மக்களின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து, ஆலையை நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

Night
Day