ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு கூமாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். 

Night
Day