ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனையில் முகத்தாடை சீரமைப்பு மையம் தொடக்கம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை போரூர் ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனையில் அன்னப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 


போருர் ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனை மற்றும் கனடாவை சேர்ந்த டிராஸ்பார்ம் கிளஸ்ட் என்ற அமைப்புடன் சேர்ந்த அன்னபிளவு சிறப்பு சிகிச்சை மையத்தை இலவசமாக நடத்தி வருகிறது. இதன் 20-வது ஆண்டை முன்னிட்டு அன்னப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் கனடா மருத்துவர்கள் மற்றும் அன்னபிளவு பாதிப்பிற்கான சிறப்பு மருத்துவ குழுவினருடன், அன்னபிளவு பாதிப்பிற்கு ஆளான மற்றும் அதில் இருந்து குணமான குழந்தைகளும் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய மருத்துவர்கள் நாட்டில் 750 குழந்தைகளில் ஒருவருக்கு அன்னப்பிளவு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனை சரி செய்ய பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்

Night
Day