ஸ்ரீ ராமச்சந்திராவில் 'நல்ல உறக்கம் நலம் தரும்' விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக உறக்க தினத்தை முன்னிட்டு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 'நல்ல உறக்கம் நலம் தரும்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.  


அதன்படி கடந்த ஒரு மாதமாக பள்ளி-கல்லூரிகள், தொழிற்சாலைகள், மற்றும் ஐடி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. அதன் முடிவாக இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தலைவர் Dr. பாலாஜி சிங்,  நல்ல உறக்கம் இல்லையென்றால் மனஅழுத்தமும், பிற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Night
Day