ஹத்ராஸ் மாவட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன என்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தரா நகரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். இதில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்ற துயரச்செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன என்றும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். பெண்கள், குழந்தைகள் உட்பட 150க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில், அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டுமென ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இந்த கோரச் சம்பவத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றிட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ளவேண்டும் என உத்தரப்பிரதேச அரசைக் கேட்டுக்கொள்வதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day