​சென்னை: இரவில் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது நேரிட்ட பயங்கரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே கொல்கத்தாவில் இருந்து தாம்பரம் 
வந்த தின் சுகியா விரைவு ரயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் பிரணவ் ஆகிய இருவரும் இரவில் பணி முடிந்து மின்சார ரயிலில் குரோம்பேட்டை வந்துள்ளனர். ரயிலில் இருந்து இறங்கி அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளம் பகுதியில் நடந்து சென்றபோது தின் சுகியா விரைவுரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடல்களை தாம்பரம் ரயில்வே போலீசார் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்‍கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Night
Day