எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து வென்று காட்டுவோம் என 257 அடி நீளத்திற்கு கழக நிர்வாகிகள் பேனர் ஒட்டியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூரில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத் தடுப்புச் சுவரில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 117வது பிறந்தநாள் விழா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவையும் முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து வென்று காட்டுவோம் என குறிப்பிட்டு, சுமார் 257 அடி நீளத்திற்கு கழக நிர்வாகிகள் பேனர் ஒட்டியுள்ளனர்.
மேலும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமை தாங்கி அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வழி நடத்த வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றி வழி நடத்தவும் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன் வருமாறு தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் வானூர் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம், கழக நிர்வாகிகள் சுதாகர், நீலாறு ஏழுமலை, மயில்வேல், மகளிரணியை சேர்ந்த லதா, சாவித்திரி, மரக்காணம் சந்தோஷ், கோலியனூர் லட்சுமி காந்தன் ஆகியோர்களின் பெயர்களும் பேனரில் இடம் பெற்றுள்ளன.