“அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" - காசிமேஜர்புரத்தில் புரட்சித்தாய் சின்னம்மா உரை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரத்தில் பொதுமக்கள் மத்தியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உரை...

2011ஆம் ஆண்டில் 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி கடனை விட்டுச் சென்றார் கருணாநிதி. 2016-ல் கடன்சுமை 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி. அம்மா ஆட்சியில் 5 வருடத்தில் 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி கடன் அதிகரித்தாலும், மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். 

ஏழை எளிய மக்களுக்கு அம்மா எத்தனை திட்டங்களைக் கொண்டுவந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்றும் அம்மாவைப் பற்றி பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் கொண்டுவந்த திட்டங்கள், நம் கண்முன்னே அம்மாவைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. 

இன்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள திமுக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக இருந்த கடன்சுமை, தற்போது 8 லட்சத்து 76 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. 4 ஆண்டுகளில் 3 லட்சம் கோடிக்கும் மேலாக கடன்சுமை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 4 லட்சம் கடனை சுமத்தியது தான் திமுகவின் சாதனை.

நேற்று மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தி இருக்கிறார்கள். அம்மா ஆட்சியில் இருந்தவரைக்கும் 200 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.170 கட்டணம். ஆனால், 2022-ல் ரூ.55 உயர்த்தி 225க்கு கொண்டு சென்றார்கள். திமுக வந்ததில் இருந்த கிட்டத்தட்ட ரூ.65 உயர்த்தியிருக்கிறார்கள். 500 யூனிட்டுக்கு அம்மா ஆட்சிகாலத்தில் ரூ.1,130 மட்டுமே கட்டணம. ஆனால், தற்போது ரூ.675 அதிகரித்துள்ளார்கள். 501 யூனிட் என்றால் கட்டணம் இன்னும் அதிகரிக்கும். இதற்கெல்லாம் காரணம், திமுக அரசுக்கு நிர்வாகத்திறமை இல்லை. எங்கு பார்த்தாலும் டிரான்ஸ்பார்மர்கள் வெடிப்பதை பார்க்க முடிகிறது. அவற்றை சரிவர பராமரிப்பதில்லை. வெளியில் இருந்து வாங்கி மின்சாரத்தை மக்களுக்கு கொடுக்கிறார்கள். மின்சாரத்துறையில் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. நிர்வாகத்தை சரியாக செய்தால் வெளியில் சென்று கடன் வாங்கவே வேண்டாம். ஆனால், மின்சாரத்துறையில் செயற்கையாக கடனை உருவாக்கி வருகிறார்கள். இதுதான் திமுகவின் சாதனை. இனி நல்ல முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உரை.

Night
Day