எழுத்தின் அளவு: அ+ அ- அ
”திமுகவின் சலசலப்பு அடங்கப் போகிறது, திமுகவினர் பதில் சொல்லி ஆக வேண்டும். திமுகவின் கோரப் பிடியில் இருந்து தமிழக மக்களை காக்க நாம் வந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது
என்னுடைய பார்வை நேர் கொண்ட பார்வை என சின்னம்மா திட்டவட்டம்; எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். நடப்பதை எல்லாம் பொறுமையோடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதிமுகவைச் சேர்ந்த பலரை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.”
திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், முன்பெல்லாம் ஒரு கிலோ, 2 கிலோ என்ற அளவில் கடத்தப்பட்டு வந்த போதைப் பொருட்கள், தற்போது 3 ஆயிரம் கிலோ, 4 ஆயிரம் கிலோ என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் கோரப் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரவேண்டும் என்றும் சின்னம்மா தெரிவித்தார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது இந்த நேரத்தில் சரியான முடிவல்ல என்றும் இது தவறானது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.