எழுத்தின் அளவு: அ+ அ- அ
மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்று, மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
மாண்புமிகு அம்மாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வரும் திங்கள் கிழமை மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வருகைதரும் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்று மதுரை விமான நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
என்றென்றும் எங்கள் அஇஅதிமுகவின் தலைவியே, திசை தெரியாமல் செல்லும் அஇஅதிமுக என்ற கப்பலை தலைமை ஏற்க வருக என குறிப்பிட்டு கழகத்தினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். மேலும், தியாகத்தலைவி, தமிழர் குலசாமி என சுவரொட்டிகளில் குறிப்பிட்டு புரட்சித்தாய் சின்னமாவை கழகத்தினர் போற்றியுள்ளனர்.
மதுரை விமான நிலையம், பெருங்குடி, மண்டேலா நகர், ரிங் ரோடு, சிந்தாமணி, விரகனூர் ரிங் ரோடு, தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் புரட்சித்தாய் சின்னமாவை வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.