'சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்' - கழகத்தினருக்கு அழைப்பு விடுத்து சுவரொட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

மாண்புமிகு அம்மா பிறந்தநாள் அன்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் வாருங்கள் என கழக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து வேலூர் மாவட்டம் முழுவதும் கழகத்தினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்நாளை முன்னிட்டு கழக நிர்வாகி டக்கர் ஜானகிராமன் சார்பில் வேலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தொரப்பாடி, பாகாயம், காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அஇஅதிமுக தொண்டர்களே இன்னும் பொறுத்து இருக்க வேண்டாம், மாண்புமிகு அம்மா பிறந்தநாள் அன்று கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் தனக்குப் பிறகு நூறு ஆண்டுகள் அஇஅதிமுக நிலைத்திருக்க வேண்டும் என்ற மாண்புமிகு அம்மாவின் எண்ணம் நிறைவேற வேண்டுமென்றால் பிளவுபட்ட அனைத்து அஇஅதிமுக தொண்டர்களும் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைந்து, வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைப்போம் வாருங்கள் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இந்த திமுக ஆட்சியை தோற்கடித்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் வாருங்கள் என அழைப்புவிடுத்தும் ஒன்றிணைந்து வென்று காட்டுவோம் என்ற முழக்கத்துடன் சமூக வலைதளங்களில் அஇஅதிமுக தொண்டர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Night
Day