'தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசுவதை சீமான் கைவிட வேண்டும்' - திருமாவளவன் வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது போன்று பேசுவதை சீமான் கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மேலூரில் நடைபெறும் டங்க்சன் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற அவர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக கைவிடவேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பல்கலைகழக மானியக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய விதிகள், மாநில உரிமைகளை பறிப்பது போன்று இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

Night
Day