'தமிழக மக்களிடம் இருந்து முதலமைச்சர் out of control ஆக செல்லவுள்ளார்' - பாஜக மூத்த தலைவர் தமிழிசை கடும் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இன்னும் 11 மாதங்களில் தமிழக முதலமைச்சர் out of control ஆக செல்ல உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். 


சிவந்தி ஆதித்தனாரின் 12ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், out of control ஆக இருப்பதன் காரணமாக தமிழக முதலமைச்சர் மிகவும் பதற்றத்துடன் பேசி வருவதாக தெரிவித்தார். மத்திய அரசுடன் எப்போதும் ஒரு மோதல் போக்கு இருந்தால் எப்படி என கேள்வி எழுப்பிய தமிழிசை, நிதி பற்றி பேசும் முதலமைச்சர் ஏன் நிதிஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

Night
Day