''அரசமைப்பு நிறுவனங்கள் மோடியின் சொத்து அல்ல'' - ராகுல் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் அரசமைப்பு நிறுவனங்கள் பிரதமர் மோடியின் சொத்து அல்ல என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி சாடியுள்ளார்.

வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி நேற்று அங்கு வாகனப் பேரணி நடத்தினார். அப்போது பேசிய அவர், நாட்டின் அனைத்து அரசமைப்பு நிறுவனங்களையும் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாகவும் நீதித்துறை, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, உள்பட அரசமைப்பு நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ்  அமைப்பை சேர்ந்தவர்களை திணித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். அரசமைப்பை பாதுகாக்க முயற்சிப்பவர்களுக்கும், அழிக்க முயற்சிப்பவர்களுக்கும் இடையேயான யுத்தமே தற்போதைய மக்களவை தேர்தல் என்றும் அரசமைப்பு நிறுவனங்கள் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்குமானது என்றும் ராகுல் தெரிவித்தார்.

Night
Day