10ம் வகுப்பு பயிலும் 7 மாணவிகள் சைல்டு லைனுக்கு புகார் அளித்த நிலையில் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 7 பேர் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  

ஒத்தப்புளி அருகே  இயங்கி வரும்  அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக சைல்டு லைன் அமைப்பினரிடம் 10ம் வகுப்பு பயிலும் 7 மாணவிகள் புகார் தெரிவித்தனர். 

இது குறித்து  மாவட்ட குழந்தைகள் நல  மையம் சார்பில் குழந்தைகள் நல அலுவலர்கள், பொன்னமராவதி பொறுப்பு டிஎஸ்பி குமார் மற்றும் அரிமளம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து  உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போக்சோவில் கைது செய்தனர். 

Night
Day