எழுத்தின் அளவு: அ+ அ- அ
பல்வேறு யூகங்களுக்கு இடையே தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக துணைத் தலைவரும் மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மாநிலத் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் குறைந்தது பத்தாண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் இருந்தால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் 10 பேரிடம் எழுத்துப் பூர்வமான ஒப்புதல் பெற்று விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேசிய பொதுக் குழு உறுப்பினர் பதவிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவரின் முன் மொழிவு மற்றும் மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினரின் வழிமொழிவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.