10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் எனவே, டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மருத்துவமனைகள் பின்பற்றுமாறும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

varient
Night
Day