10-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு - கூடுதல் மதிப்பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட வினாவில் ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம் ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார், விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கேள்வியில் 2 வாக்கியங்களுமே முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த கேள்விக்கு மாணவர்கள் பதிலளித்திருந்தால் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கடந்த மாதம் 28 ம்தேதி தொடங்கிய 10 ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ம் தேதி நிறைவு பெற்ற நிலையில் மே 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day