107 வயது பாட்டிக்கு கனகாபிஷேக விழா - 6 தலைமுறை உறவினர்கள் உற்சாகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில், 6 தலைமுறை உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இணைந்து 107 வயதான மூதாட்டிக்கு கனகாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர்.


சின்னக்காளிபாளையத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டிக்கு தற்போது 107 வயதாகிறது. இந்த நிலையிலும் அவர் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்வதுடன், மிகுந்த ஆரோக்கியத்துடன் நடமாடி வருகிறார். எப்போதும் நிதானத்தை கடைபிடிக்கும் பேச்சியம்மாள், கம்பு, வரகு, திணை, கோதுமை ஆகியவற்றை உணவாக உட்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு 107 வயதாவதை முன்னிட்டு, அவரது 6 தலைமுறை உறவுகள் 500-க்கும் மேற்பட்டோர் இணைந்து திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை உணவு, மதிய விருந்து, வள்ளி கும்மியாட்டம், பரதம் உள்ளிட்டவற்றுடன் கனகாபிஷேக விழாவை கொண்டாடி அசத்தியுள்ளனர்.

Night
Day