11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- 91.17% பேர் தேர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே 7.43 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். 

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைப்பெற்றது. இத்தேர்வினை மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 7 லட்சத்து 39 ஆயிரத்து 539  மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 மாணவியர்களும், 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட 7.43 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று மாணவியர் அசத்தியுள்ளனர். 

இதேபோல் தேர்வு எழுதிய 8 ஆயிரத்து 221 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களில், 7 ஆயிரத்து 504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 187 சிறைவாசிகளில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 90.93 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 91.17 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

Night
Day