12-ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 12-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வரும் 13, 14,15,16 ஆகிய 4 நாட்களில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.   

Night
Day