எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் நாளுக்கு நாள் விளம்பர திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோவையில் 17 வயதுடைய சிறுமியை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் சில இளைஞர்களுடன் பழக்கம் கொண்டிருந்தார். அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களது அழைப்பை ஏற்று அங்கு சென்ற சிறுமியை, 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. சிறுமி வீடு திரும்ப தாமதமானதால், பதறிப்போன சிறுமியின் பாட்டி, உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 17 வயதுடைய சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.