2வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. நேற்று முன் தினம் தங்கம் சவரனுக்கு 58 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இரண்டே நாட்களில் ஆயிரத்து 160 ரூபாய் குறைந்துள்ளது. 

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day