எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 2 நாட்கள் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தில் இரண்டு இணையான கல்வி நீரோட்டங்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று மேலே செல்கிறது, மற்றொன்று சரிந்து வருவதாக தெரிவித்தார். தனியார் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால் அரசு பள்ளிகளின் நிலைமை அந்தோ பரிதாப நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை என்றம் அரசு பல்கலைக்கழகங்களின் நிலை மோசமாக உள்ளதாலேயே, அவர்களின் தரம் உயர்த்துவதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.