2 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில்கள் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், நாகர்கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு சென்றடைகிறது. இதே போல் மதுரையில் இருந்து பெங்களூருவிற்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், காலை 5.15 மணிக்கு புறப்பட்டு பகல் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். 

இவ்விரு வந்தேர பாரத் ரயில் சேவைகளையும் காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வந்தே பாரத் ரயில்களின் சேவை உதவும் என்றும், வந்தே பாரத் ரயில்கள் நின்று செல்லும் வகையில் சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். வந்தே பாரத் ரயில்களில் விரைவில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் கோவில் நகரையும், கர்நாடகாவின் ஐ.டி நகரையும் வந்தே பாரத் ரயில் இணைக்கும் என்று தெரிவித்தார். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.  

Night
Day