2025ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

2025ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது பெற உள்ளவர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், கலை, ட்ரோன் வடிவமைப்பு, கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள திரு.அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திரு.அஜித்குமார் அவர்கள் தனது வாழ்வில் மென்மேலும் பல உச்சங்களை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

அதேபோன்று பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள ஜவுளி வர்த்தகத்தில் தனி முத்திரை பதித்துள்ள திரு.நல்லி குப்புசாமி செட்டி அவர்களுக்கும், பரத நாட்டியக் கலைஞர் செல்வி.ஷோபனா சந்திரகுமார் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரும் பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்தவருமான திரு. ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கும், மிருதங்க கலைஞர் திரு. குருவாயூர் துரை அவர்களுக்கும், சமையல் கலைஞர் திரு. தாமோதரன் அவர்களுக்கும், பத்திரிக்கை துறையை சேர்ந்த திரு. லக்‌ஷ்மிபதி ராமசுப்பையர் அவர்களுக்கும், பேராசிரியர் திரு. எம்.டி. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும், தெருக்கூத்து கலைஞர் திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கும், தொழிலதிபர் திரு. ஆர்.ஜி. சந்திரமோகன் அவர்களுக்கும், ஸ்தபதி திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி அவர்களுக்கும், எழுத்தாளர் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களுக்கும் மற்றும் பறை இசை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதன் மூலம், பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள 23 பெண்களை உள்ளடக்கிய 139நபர்களுக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




Night
Day