2025-ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

2025ஆம் ஆண்டில்  மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம் என மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் ஒரு நாள், மற்றும் மார்ச்சில் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் மாதத்தில் வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, மகாவீரர் ஜெயந்தி, தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மே, ஜூன், ஜூலை மாதத்தில் தலா ஒரு நாட்களும், ஆகஸ்ட்டில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் மிலாதுன் நபிக்கும், அக்டோபரில் ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி, தீபாவளி என 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் ஒரு விடுமுறை கூட இல்லாத நிலையில், டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது

Night
Day