2026ம் ஆண்டு அம்மாவின் ஆட்சியை அமைப்போம் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, விளம்பர திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், திமுகவினரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் ஆமை வேகத்தில் செயல்படுவதாக விமர்சித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் போதைப் பொருள் தாராளமாக கிடைப்பதாகவும், அதனை தடுக்க விளம்பர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 2026ல் அம்மாவின் ஆட்சியை அமைப்பதே தங்களின் இலக்கு புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

Night
Day