எழுத்தின் அளவு: அ+ அ- அ
மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை திமுக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மக்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிகளை வழங்கிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்கள் நலனுக்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும், குறிப்பாக மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முறைப்படி மேற்கொள்ளவில்லை என்றும் சின்னம்மா குற்றம் சாட்டினார்.
வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று, அம்மாவின் ஆட்சியை அமைக்கும் என்று புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்தார்.
வாக்களித்த மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை திமுக அரசு முறைப்படி செய்யவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தினார்.