2026-ம் ஆண்டு தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அம்மா ஆட்சியை கொண்டு வந்து மக்களுக்கு நல்ல திட்டங்களை தருவோம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் எந்தப்பணிகளும் நடைபெறவில்லை என்றும் திமுக ஆட்சியாளர்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில், அம்மாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அங்கு செய்தியாளர்களுக்‍குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் எந்தப்பணிகளும் நடைபெறவில்லை என்றும் திமுக ஆட்சியின் முறைகேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து பேசிய புரட்சித்தாய் சின்னம்மா, மாண்புமிகு அம்மா கொண்டுவந்த அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை விளம்பர அரசு முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் வரும் 2026ல் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் மாண்புமிகு அம்மா ஆட்சி வந்தால் மக்களுக்கான ஆட்சி மலரும் என்றும் சின்னம்மா திட்டவட்டமாக தெரிவித்தார்.

பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, லாரிகள் மூலம் குடிநீரை விநியோகித்து இருந்தால் உயிரிழப்புகளை தடுத்து இருக்‍கலாம் என தெரிவித்தார்.  திமுக ஆட்சியாளர்களுக்கு ஆட்சி நடத்த தெரியாததால் மக்‍கள் பாதிக்கப்படுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டினார்.

Night
Day