2026-ல் அஇஅதிமுக ஆட்சி அமைக்கும்- கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத்தொண்டர்களை நேரில் சந்தித்தார்
"ஏழை, எளிய மக்‍கள் நலனுக்‍காக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அஇஅதிமுக-வை, புரட்சித்​தலைவி அம்மா, சிறப்பாக கட்டிக்‍காத்து, அகில இந்தியாவிலேயே 3வது பெரிய அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்தார் என்றும், இத்தகைய மாபெரும் இயக்‍கம், சில சுயநலவாதிகளின் செயல்களால் தற்போது தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருவதாகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றி, வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் கழகத்தை மாபெரும் வெற்றியடையச் செய்து புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்​சியை மீண்டும் மலரச் செய்வோம் என்று உறுதிபடத் தெரிவித்தார். ​விரைவில் சுற்றுப் பயணம் தொடங்கப்போவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.




Night
Day