23 வகையான நாய்களுக்கு அதிரடி தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த 2 வளர்ப்பு நாய்கள் கொடூரமாகத் தாக்‍கி படுகாயப்படுத்தியதை அடுத்து, 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்‍கு தடை விதிக்‍கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையின் கீழ் வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்‍கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்‍கன் புல் டாக், போயர் போயல் ஆகிய நாய் இனங்களுக்‍கு தடை விதிக்‍கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக்‍, காக்‍கேஷியன் ஷெபர்டு டாக்‍, செளத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட் வீலர்ஸ் ஆகிய நாய் இனங்களும் -

டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்‍கப்படும் வகைகளும் மிகவும் ஆக்‍ரோஷமானவை எனவும், மனிதர்களுக்‍கு ஆபத்தை விளைவிக்‍கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்‍கிறது.

இந்த 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங்களை இறக்‍குமதி செய்யவும், இனப்பெருக்‍கம் செய்யவும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்யவும் தடை விதிக்‍கப்பட்டுள்ளது. இந்த இன நாய்களின் எல்லா வகை பயன்பாட்டிற்கும் தடை விதிக்‍கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வளர்ப்பு பிராணிகளாக இந்த வகை நாய்களை வைத்திருப்போர், அவற்றுக்‍கு உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்‍கம் செய்யாதவாறு பார்த்துக்‍ கொள்ள வேண்டும் - நாய் வளர்ப்போர், நாய்களை, வெளியே பொது இடங்களுக்‍கு கூட்டிச் செல்லும்போது, கட்டாயமாக இணைப்புச் சங்கிலி மற்றும் தற்காப்பு முகக்‍கவசம் அணிந்து அழைத்துச் செல்ல வேண்டும் - இணைப்புச் சங்கிலியின் அளவு குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம் இருக்‍க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Night
Day