25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிககனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர் உட்பட மொத்தம் 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

varient
Night
Day