3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸிற்கு கூடுதல் அவகாசம் அளிக்க மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸிற்கு கூடுதல் அவகாசம் அளிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் ராஜேஸ்தாஸ் தரப்பு கடந்த 1 முதல் 7 ஆம் தேதி வரை மட்டுமே வாதாட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நேற்று ராஜேஸ்தாஸ் தரப்பு வாதாட கூடுதல் அவகாசம் கோரியது. இதனை நிராகரித்த நீதிபதி பூர்ணிமா, வரும் 9ஆம் தேதி அரசு தரப்பு இறுதி வாதத்தை முன் வைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.

Night
Day