எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழுப்புரைச் சேர்ந்த உஸ்மான் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள 3 கிலோ மீட்டர் தூரம் ஓடியதாக அங்கு நடந்த சம்பவம் பற்றி நம்மோடு பகிர்ந்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் அங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காஷ்மீருக்கு சுற்றுலா சென்று தாக்குதலில் இருந்து தப்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த சையத் உஸ்மான் என்பவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள 3 கிலோ மீட்டர் தூரம் ஓடியதாக தெரிவித்துள்ளார்.
தான் பைசரன் புல்வெளியில் இருந்த போது குதிரை ஓட்டியிடம் வெடிச்சத்தம் கேட்டதாக தெரிவித்த போது, அவர் வெடி வெடிக்கவில்லை துப்பாக்கிச்சூடு நடக்கிறது என கூறியதாக தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூடு நடந்த போது அங்கு பாதுகாப்பு படையினர் இல்லை என தெரிவித்த அவர், சுமார் 15 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு பாதுகாப்பு படையினர் வந்ததாக தெரிவித்தார்.