3 நாட்களில் ரூ.3,160 குறைந்த தங்கம் விலை

எழுத்தின் அளவு: அ+ அ-

பட்ஜெட் தாக்கலின் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. 

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், கடந்த 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்றைய தினம் தங்கம் சவரனுக்கு அதிரடியாக 2 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்றும் தங்கம் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இன்றும் ஆபரண தங்கம் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 430 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 89 ரூபாய்க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் குறைந்து 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 நாட்களில் 3 ஆயிரத்து 160 ரூபாய் குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Night
Day