எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு தினங்களுக்கு வட தமிழக மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.