4 மாவட்டங்களில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க கோரி வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கும் வகையில், கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயற்கையின் சுகாதார பணியாளர்களான கழுகுகளை பாதுகாக்க, கழுகுகள் அதிகம் வசிக்கும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து ஜூன் 5-ஆம் தேதிக்குள் மத்திய - மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Night
Day