6 மாதமாக எங்கே சென்றீர்கள் - திக்குமுக்காடிய அமைச்சர் நேரு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆறு மாதமாக வேலை இல்லாமல் பசியால் வாடிக் கொண்டிருந்த போதெல்லாம் வராமல், இப்போது எதற்கு வந்தீர்கள் என்று அமைச்சர் கே.என் நேருவிடம் மாஞ்சோலை பகுதியை சேர்ந்த சொந்த கட்சி  கவுன்சிலரே அதிரடியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பி நிலவியது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலு முத்து ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை முடிவதை அடுத்து, அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் 350 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற மறுத்து தொடர்ந்து அங்கு வசித்து வருகின்றனர். வேலை, உணவு இன்றி அவர்கள் வாடிவரும் நிலையில், நெல்லை மாவட்டத்தின் பொறுப்பாளராக உள்ள அமைச்சர் கே.என்.நேரு மாஞ்சோலை பகுதிக்கு கருத்து கேட்பதற்காக வருகை தந்தார். அவருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர்.

அமைச்சர் வருவதை அடுத்து, திமுகவுக்கு ஆதரவானவர்கள் ஏற்கனவே அங்கு அமர வைக்கப்பட்டிருந்தனர். அப்போது மணிமுத்தாறு பேரூராட்சி ஊத்து பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் ஸ்டாலின், ஆறு மாதமாக நாங்கள் இந்த பகுதிகளில் வேலை இல்லாமல் பசியால் வாடிக் கொண்டு இருக்கிறோம், அப்போதெல்லாம் வராத நீங்கள் இப்போது எதற்கு நீங்கள் வந்தீர்கள் என அதிரடியாக கேள்விக் கணைகளை தொடுத்து அதிரவைத்தார்.

Night
Day