7ம் கட்ட தேர்தல் - இன்று பரப்புரை நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 -வது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடந்த ஏப்ரல் 19, 26, மற்றும் கடந்த 7, 13, 20 மற்றும் 25-ம் தேதிகளில் முதல் 6 கட்ட வாக்குப்பதிவு  நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 66 புள்ளி 14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தலில் 66 புள்ளி 71 சதவீதம், 3-ம் கட்ட தேர்தலில் 65 புள்ளி 68 சதவீதம், 4-ம் கட்ட தேர்தலில் 69 புள்ளி 16 சதவீதம், 5-ம் கட்ட தேர்தலில் 62 புள்ளி 20 சதவீதம், 6-ம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. பீகாரில் 8, சண்டிகர் 1, இமாச்சலப் பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, ஒடிசா 6, பஞ்சாப் 13, உத்தரப் பிரதேசம் 13, மேற்கு வங்கத்தில் 9 என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் இடம்பெற்றுள்ளது. 3-வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இந்த முறை பல லட்சம் வாக்குகள் வித்தியாசதில் வெற்றி பெற வேண்டும் என தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் வாரணாசியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார். அதேபோல் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

வரும் 1-ம் தேதி 7-வது கட்டத் தேர்தல் முடிவடைவதைத் தொடர்ந்து ஜுன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day