7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளம்பர திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் ஸ்ரீனிவாசன், 14 ஆண்டுக்கு மேல் பதவி உயர்வு பெற இயலாமல் உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இளநிலை உதவியாளர் தட்டச்சாளர்களுக்கு துறை தேர்வு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார்.

Night
Day