76-வது குடியரசு தினம் - நாடு முழுவதும் பாதுகாப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் இரயில்வே பாதுகாப்புபடை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாட்டின் 76வது குடியரசுதினம் நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் நாட்டின் முக்கிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புபடை ஆய்வாளர் தலைமையில், மோப்பநாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நடைமேடைகள், பயணிகள் காத்திருப்புஅறை, பார்சல் கொண்டுசெல்லும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day