76-வது குடியரசு தினவிழா - தேசியக்கொடியை ஏற்றிவைத்து ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் 76வது குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

தமிழகம் முழுவதும் 76வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை பகுதி அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில், காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஆளுநா் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக் மலர் தூவப்பட்டது.

பின்னர் முப்படையினா், காவல் துறையினா், தேசிய மாணவா் படை, பல்வேறு காவல் பிரிவினா், வனம் மற்றும் தீயணைப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். 

தொடர்ந்து ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும், மாணவ மாணவிகளின் காவடி, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
குடியரசுத் தினத்தையொட்டி சென்னையில் 18,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Night
Day