8-வது நாளாக தொடரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் 8வது நாளாக நீடிக்கிறது. 


சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து கடந்த 5ம் தேதி முதல் சக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டபடாத நிலையில், 8வது நாளான இன்று தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தொழிலாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். 

Night
Day